ரூ. 300 கோடி வசூல்: வார் படம் புதிய சாதனை!

வார் படம் தற்போது ரூ. 300 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. அதாவது படம் வெளியான 19-ம் நாளில் இந்த இலக்கை எட்டியுள்ளது.
ரூ. 300 கோடி வசூல்: வார் படம் புதிய சாதனை!
Updated on
1 min read

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார். இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சமீபத்தில் வெளியானது. முதல் நாளிலேயே இந்தியா முழுக்க ரூ. 53.35 கோடி வசூலித்தது. அதாவது ஹிந்தியில் ரூ. 51.60 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.75 கோடியும் வசூலாகக் கிடைத்தன. இதன்மூலம் முதல் நாளன்று இந்தியாவில் அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றது (பாகுபலி 2 படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 121 கோடி வசூலித்தது. ஹிந்தியில் ரூ. 41 கோடியும் தெலுங்கு + தமிழ் + மலையாளம் ஆகிய மொழிகளில் ரூ. 80 கோடியும் வசூலித்தது).

மேலும்,  2019-ல், இந்தியாவில் வேகமாக ரூ. 200 கோடி வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் பெற்றது. வார் படம் போலவே சஞ்சு, சுல்தான், டைகர் ஜிந்தா ஹை ஆகிய ஹிந்திப் படங்களும் முதல் ஏழு நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளன. (பாகுபலி 2 ஹிந்திப் படம் முதல் ஆறு நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை செய்தது. ஏழு நாள்களில் ரூ. 247 கோடி வசூலித்தது.)

இந்நிலையில் வார் படம் தற்போது ரூ. 300 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. அதாவது படம் வெளியான 19-ம் நாளில் இந்த இலக்கை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளது. சுல்தான், பத்மாவத் ஆகிய படங்களின் வசூலைத் தாண்டி இந்த இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இதன் வசூல் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்றுவரை வார் படம் இந்தியாவில் ரூ. 308 கோடி வசூலித்துள்ளது. 

இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்துள்ள ஹிந்திப் படங்கள்

1. பாகுபலி 2 (ஹிந்தி)
2. பிகே
3. பஜ்ரங்கி பைஜான்
4. சுல்தான்
5. டங்கல்
6. டைகர் ஜிந்தா ஹை
7. பத்மாவத்
8. சஞ்சு
9. வார்

(இந்தப் படங்களில் பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பு மட்டுமே இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலித்த ஒரே ஹிந்திப் படம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com