பிகில் ஊதிச்சா! ஊத்திக்கிச்சா?

சைலண்டாக இல்லை கொஞ்சம் சவுண்டாகவே ஒரு பிகில் போடலாம் என்கிறார்கள் இதுவரை படம் பார்த்த விஜய் ரசிகர்கள்.
பிகில் ஊதிச்சா! ஊத்திக்கிச்சா?
Published on
Updated on
2 min read

கோலிவுட்டில் இன்று பிகில், கைதி என இரண்டு பெரிய படங்கள் ரிலீஸாகி உள்ளன. பிகிலில் விஜய் நடித்திருக்க கைதியில் கார்த்தி நடித்துள்ளார். இரண்டு படங்களும் வித்யாசமான ஜானரில் இருந்தாலும், இந்த தீபாவளி ரேஸில் இவை மட்டுமே பங்கு பெறுகின்றன.

பிகில் ஸ்போர்ட்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தெறி (2016), மெர்சல் (2017) ஆகிய இரண்டு படங்களின் அபார வெற்றிக்குப் பிறகு மூன்றாம் முறையாக விஜய் அட்லி இணைகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பே படத்துக்கு அதிகம் இருந்தது. பிகிலில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஒன்று பெண்கள் ஃபுட்பால் அணிக்கு பயிற்சியாளராக இளமையான விஜய், மற்றொருவர் நடுத்தர வயதில் தோன்றக்கூடிய ராயப்பன் என்ற டான் கதாபாத்திரம்.

இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசான போதே, ரசிகர்கள் பொறுமையாக படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்தனர். எல்லா தடைகளையும் மீறி திரை அரங்குகளில் அதிக விலையில் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. இந்நிலையில் பிகில் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த திரை பிரபலங்கள் சிலர் விஜய், அட்லி மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிகாலையிலிருந்தே அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் தொடங்கிவிட்டது. தளபதி இல்லாத தீபாவளியா என்று பிகில் படம் பார்த்த ரசிகர்கள் கூறினார்கள்.

பிகில் படம் பார்த்த ஒருசில ரசிகர்களிடம் படம் எப்படி என்று கேட்டபோது அவர்கள் கூறியது :

'படம் எனக்கு பிடிச்சிருந்து. சில இடங்களில் விஜய் ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். ஜில்லா படத்துல பார்த்த மாதிரி....படத்துல முதல் பாதி செம விறுவிறுப்பாக இருந்தது. டாப் ஸ்பீட். ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோ. படத்துல ராயப்பா கேரக்டர் நன்றாக இருந்தது. விவேக்குக்கு இன்னும் கொஞ்சம் காமெடி தந்திருக்கலாம். யோகி பாபு விஜய்யை நல்லா கலாய்க்கிறார். ரசிக்கும்படி இருந்தது. கொஞ்ச நேரம் வந்தாலும் சூப்பரா நடிச்சிருந்தார் யோகி பாபு. நயன்தாரா கல்யாணம் சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் படத்துல ரொம்ப அழகா இருக்காங்க. இன்னொரு தடவை இந்தப் படத்தை நிச்சயம் பார்ப்பேன். ( ஹேம்நாத், மீடியாவில் பணிபுரிபவர்)

படம் சூப்பர். எல்லா சீன்களும் சூப்பர். ஒரு நிமிஷம் கூட பார்வையைத் திருப்ப முடியவில்லை.முதல் நாள் முதல் ஷோ பார்த்த காரணம் கதை பத்தி யாரும் லீக் பண்ணறதுக்குள்ள, நெட் முழுக்க ஸ்பாய்லர்ஸ் வரதுக்குள்ள பாக்கணும்னு தான். பெண்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். ரெண்டாம் பாதி முழுக்க எமோஷனலா இருந்துச்சு. முக்கியமா இந்தப் படத்துல ஒரு நல்ல மெசேஜ் இருக்கு. (கமலேஷ், மாணவர்)

மைக்கேல் ராயப்பன் ரெண்டு பேரும் மனசுல நிக்கறாங்க. மைக்கேல் ஆக்ரோஷமான கதாபாத்திரம். விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும். கமர்ஷியல் மற்றும் கருத்து ரெண்டுமே இந்தப் படத்துல இருக்கு. முதல் பாதி கொஞ்சம் ஸ்லோ ஆனால் ரெண்டாவது பகுதி போனதே தெரியாது. கேம் காட்சிகள் மிகவும் சூப்பர். ம்யூசிக் பத்தி சொல்லவே வேணாம்.  பி.ஜி.எம் அட்டகாசம். ரஹ்மான் சார் மியூசிக் படத்தை உயர்த்திருக்கு. (சுஜாதா, தனியார் நிறுவன ஊழியர்)

படம் வேற லெவல்ல இருக்கு. படம் வெறித்தனம். ஆண்கள் பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சிங்கப்பெண்ணே பாட்டு ரொம்ப பிடிச்சது. முதல் பாதியை விட ரெண்டாவது பாதி படம் சூப்பர். ரகளையா பார்த்து சந்தோஷமா ரசிச்சிட்டு வரக் கூடிய படம். (நவீனா,  கல்லூரி மாணவி)

நோ கமெண்ட்ஸ். படம் சுமார்தான். எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை. ஓகே தான். படத்துல சில சீன்ஸ் நல்லா இருந்தது. ஆனால் ரொம்ப ஹீரோயிஸம். பெண்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். (கிஷோர், மாணவர்) 

சைலண்டாக இல்லை கொஞ்சம் சவுண்டாகவே ஒரு பிகில் போடலாம் என்கிறார்கள் இதுவரை படம் பார்த்த விஜய் ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com