
பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் அடுத்த இரு மாதங்கள் அதிகத் தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.
இந்த வாரம் நட்பே துணை, உறியடி 2, குப்பத்து ராஜா, குடிமகன், ஒரு கதை சொல்லட்டுமா, கணேஷா மீண்டும் சந்திப்போம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இதில் ஏப்ரல் 4 அன்று நட்பே துணை படமும் அடுத்த நாளன்று இதர படங்களும் வெளிவரவுள்ளன.
இந்த ஆறு படங்களில் ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள நட்பே துணை படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.