‘காஞ்சனா’ ஹிந்தி ரீமேக்கில் சிவப்புப் புடவையில் கலக்கப் போகும் ஹீரோ!

உடலை கட்டுக்கோப்பாக மெயிண்டெயின் செய்வதில் சரத்குமார் பெர்ஃபெக்ட். அப்படிப்பட்டவரை ஒரு திருநங்கை கேரக்டரில் நடிக்க வைத்து படத்தில் அந்தக் கேரக்டருக்கு மிக அருமையான காட்சிகளை வைத்து மெருகூட்டி இருந்தார
‘காஞ்சனா’ ஹிந்தி ரீமேக்கில் சிவப்புப் புடவையில் கலக்கப் போகும் ஹீரோ!
Published on
Updated on
2 min read

2011 ஆண்டில் வெளிவந்த 'காஞ்சனா' திரைப்படம் அதுவரை வெளிவந்த பேய்ப் படங்களின் ரெகார்டை உடைத்து அதீத வெற்றி கண்டது. இயக்குனராகவும், ஹீரோவாகவும் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பிரேக் அளித்த திரைப்படம் அது.

அதற்கு முன்பே முனி பார்ட் 1 மூலமாக பேய்ப்படங்களுக்கான தனி ஜானரில் தனக்கென துண்டு போட்டு ஸ்திரமான இடமொன்றை ராகவா லாரன்ஸ் பிடித்திருந்தாலும் ‘காஞ்சனா’ திரைப்படம் ஒரு திருநங்கையின் ஆவியை மையமாக வைத்து வெளிவந்த போது அதற்கான கூடுதல் அங்கீகாரம் கிடைத்தது. அத்துடன் அத்திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களின் கற்பனை எல்லைகளையும் தாண்டி அதி அற்புதமாக திருநங்கை கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தார் நடிகர் சரத்குமார்.

இன்றும் தமிழ்நாட்டில் கட்டுமஸ்தான ஆண்களைக் கண்டால் 'சரத்குமார் மாதிரி பாடி மெயிண்டெயின் பண்றாங்களோ' என்று பலரும் வியப்பதுண்டு. அந்த அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாக மெயிண்டெயின் செய்வதில் சரத்குமார் பெர்ஃபெக்ட். அப்படிப்பட்டவரை ஒரு திருநங்கை கேரக்டரில் நடிக்க வைத்து படத்தில் அந்தக் கேரக்டருக்கு மிக அருமையான காட்சிகளை வைத்து மெருகூட்டி இருந்தார்கள்.

காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளா, தேவதர்ஷிணி காமெடிக் காட்சிகள் உச்சத்தில் இருந்த போதும், ராய் லட்சுமியின் கவர்ச்சியும் அதீதமாக இருந்த போதும் அவை அத்தனையையும் விஞ்சி நின்றது சரத்குமார் ‘திருநங்கையாக’ நடித்தது தான். அந்தப் படத்தின் ஜீவனே சரத் நடித்த திருநங்கை கதாபாத்திரம் தான். ஆணழகன் பட்டம் பெற்ற நடிகர் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தன் நடிப்பின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையாக இருக்கலாம். எனவே தான் அந்த கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது. 

காஞ்சனாவுக்குப் பின் காஞ்சனா 2 வெளிவந்தது. இதோ இப்போது காஞ்சனா 3 யும் வெளிவந்து விட்டது. இத்திரைப்படத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு திருநங்கைகளுக்கான இல்லம் ஒன்றை நிர்மாணிக்க இயக்குனர் ராகவ லாரன்ஸ் தீர்மானித்திருக்கிறார்.

தமிழில் காஞ்சனா 3 வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்தியில் காஞ்சனா 1 திரைப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறது பாலிவுட். தமிழ் ரசிகர்கள், பேய்படத்தை ரசிப்பது ஒருவகை என்றால் இந்தியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அதற்கேற்ப இந்தியில் படத்தை ரீமேக் செய்யும் போது திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். தமிழில் ஹீரோவின் அம்மா( கோவை சரளா), மற்றும் அண்ணி(தேவதர்ஷிணி) கேரக்டர்களுக்கு திரைக்கதைப்படி நகைச்சுவையில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இந்தியில் அவை மாறலாம்.

இந்தியில் நாயகியாக நடிக்கவிருப்பது கைரா அத்வானி. சரத்குமார் வேடத்தை ஏற்கப்போவது ரஜினியின் 2.    O திரைப்படத்தில் பட்சி ராஜனாகப் பட்டையைக் கிளப்பிய அக்‌ஷய் குமாராம். சரி அப்படியென்றால் ஹீரோ யார்? என்கிறீர்களா?  ஒருவேளை லாரன்ஸ் மாஸ்டராகவே இருக்கலாம். அல்லது அக்‌ஷய் குமாராகவே கூட இருக்கலாம். அது தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

அக்‌ஷய் குமார் திருநங்கையாக நடிக்கவிருக்கிறார் என்பது மட்டுமே பாலிவுட்டில் இருந்து கசிந்துள்ள தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com