
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி தாதாவாகவும், மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த வெற்றிப் படம் விக்ரம் வேதா. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தை ஹிந்தியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து அமீர்கான் மற்றும் சயீஃப் அலிகான் இதில் நடிக்க உள்ளனர். தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர். வேதாவாக அமீர்கானும், விக்ரமாக சயீஃப் அலிகானும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீர், சயீஃப் ஆகியோர் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹிந்தியிலும் விக்ரம் வேதா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மார்ச் 2020-ல் தொடங்க உள்ளது.