
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மெளனகுரு படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.
சாந்தகுமாரின் படம் என்பதால் இந்தப் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...