சினிமா 2019

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது.
சினிமா 2019

ஜனவரி

26: சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது.

29: இயக்குநர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் சில பெண்களும்' படம் புணே திரைப்பட விழாவில் விருதுகளைப் பெற்றது.

பிப்ரவரி

2: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் "இளையராஜா 75' விழா கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த விழா நடத்தப்பட்டது.

17: தமிழ் திரைப்பட சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
 

ஏப்ரல்

10: அரசியல் லாபத்திற்காக தனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று இசையமைப்பாளர் இளையராஜா கேட்டுக் கொண்டார்.


மே

8: கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த இளையராஜா -
எஸ்.பி.பி. இருவரும் இசை நிகழ்ச்சிக்காக மீண்டும் இணைந்தனர்.

27: இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் ஈடுபட்டனர்.

28: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜுன் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


ஜுன்

3: ஹிந்தி திணிப்புக்கு எதிராக தனது கண்டனக் குரலை சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்தார்
ஏ..ஆர். ரஹ்மான்.

5: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கடந்த தேர்தலில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்ட இந்த அணி மீண்டும் களத்தில் இறங்கியது.

8: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
9: நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், பாக்யராஜ் என இரு தரப்பினரும் வேட்புமனுதாக்கல் செய்ததால் தேர்தல் களம் சூடு பிடித்தது.

10: தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

11: சுவாமி சங்கரதாஸ் அணியில் இடம்பெற்ற பாக்யராஜ் நாடக கலைஞர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது கண்டிக்கத்தக்கது என நடிகர் சங்க தேர்தல் அதிகாரியிடம் நடிகர் கருணாஸ் புகார் அளித்தார்.

11: நடிகர் சங்கத் தேர்தலில் விமல், ரமேஷ் கண்ணா மனுக்கள் நிராகரிப்பு.
23: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. ஜூலை 2 -இல் இயக்குநர் சங்கத்துக்கு நடைபெறுவதாக இருந்த தேர்தல் தேதி மாற்றப்பட்டது.

24: தியாகராஜா பாகவதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்தது.

30: ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப் படங்களை வெளியிட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் திடீர் கட்டுப்பாடு விதித்தது.

ஜூலை

1: இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா ராஜிநாமா செய்தார்.

21: இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு.

செப்டம்பர்

18: பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நவம்பர்

1: கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த இயக்குநர் பாரதிராஜாவும், இசையமைப்பாளர் இளையராஜாவும் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துப் பேசினர்.

7: தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கும் சிறப்பு அதிகாரியை நியமித்தது.

7: தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் தனது அலுவலத்தில் இயக்குநர் பாலசந்தர் சிலையைத் திறந்தார் கமல்ஹாசன். ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு.

18: கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி இளையராஜாவின் "உங்கள் நான்' இசை நிகழ்ச்சி நடந்தது.

28: இசையமைப்பாளர் இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் கால அவகாசம் அளிக்க வேண்டும் என பிரசாத் நிர்வாகத்திடம் திரையுலகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

டிசம்பர்

7: "தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
12: 17 - ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது.

19: சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com