சுடச்சுட

  

  +2 படிக்கும் திறமையான, ஏழை மாணவர்களை அகரத்துக்கு அறிமுகப்படுத்துங்கள்: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

  By DIN  |   Published on : 12th February 2019 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agaram1

   

  +2 படிக்கும் திறமையான ஏழை மாணவர்களை அகரம் அறக்கட்டளைக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  அரசுப் பள்ளி மாணவர்கள், கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளாகத் துணைபுரிகிறது. பெற்றோரை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடரமுடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுவரை 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள்.

  2019-ம் ஆண்டு +2 தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் அகரம் அறக்கட்டளை நிறுவனத்தின் தொடர்பு எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai