சுடச்சுட

  

  மூன்றாவது வரிசையிலிருந்து நடுவில் நின்று நடனமாடும் அளவுக்கு முன்னேறிய தருணம்: மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!

  By எழில்  |   Published on : 12th February 2019 03:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  madhuri12xx

   

  பிரபல பாலிவுட் நடிகை மாதிரி தீட்சித்தின் முதல் சூப்பர் ஹிட் படம் - தேஸாப். 1988-ல் வெளியானது.

  தி கபில் ஷர்மா ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை மாதுரி தீட்சித், தன்னை ரசிகர்கள் முதல்முதலாக அடையாளம் கண்டுகொண்டது குறித்து கூறியதாவது: 

  தேஸாப் படம் வெளியானதுபோது நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் நான் உள்பட மூன்று பெண்கள் நடனமாடவேண்டும். அப்போது நான் ஒரு சாதாரண, புகழடையாத நடிகை என்பதால் பின்வரிசையில்தான் நிற்கவைக்கப்படுவேன். ஆனால் தேஸாப் படம் வெளியாகி வெற்றி பெற்றபிறகு என் நிலைமை மாறிப்போனது. பெண்களின் நடுவில் நிற்கவைத்து நடனமாட வைத்தார்கள். 

  தேஸாப் வெளியானபோது என் சகோதரியின் திருமணத்துக்காக அமெரிக்காவில் இருந்தேன். நான் இந்தியா திரும்பியபோது, விமான நிலையத்தில் என்னைப் பார்த்து இதோ பார் கதாநாயகி என 3 சிறுவர்கள் கத்தினார்கள். எல்லோரும் என்னை நோக்கி ஓடிவந்தார்கள். என்னிடம் ஆட்டோகிராப் கேட்டார்கள். நான் எம் என்று கையெழுத்து போட ஆரம்பித்தபோது ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம், நான் சொன்னேன் அல்லவா, இவர் மோகினி தான் என்றான். (அந்தப் படத்தில் மோகினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் மாதுரி). அதுதான் எனக்குக் கிடைத்த முதல் கவனம் என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai