சுடச்சுட

  

  விஸ்வாசம்: திரையரங்கில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு ரசிகர்களுக்குக் கத்திக்குத்து!

  By எழில்  |   Published on : 10th January 2019 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  viswasam_poster1

   

  வேலூரில், அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பார்க்க வந்தபோது இரு ரசிகர்களுக்குக் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

  வேலூர் அலங்கார் திரையரங்கில் இன்று காலை 3 மணிக்கு விஸ்வாசம் படத்தின் ரசிகர்கள் காட்சி நடைபெற்றது. படம் பார்க்க அஜித் ரசிகர்கள் திரண்டு வந்தார்கள். இந்நிலையில் திரையரங்கில் இடம் பிடிப்பதில் ரசிகர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பிரசாந்த் (18) மற்றும் அவருடைய மாமா ரமேஷ் (30) ஆகிய இருவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியுள்ளார்கள். இதையடுத்து இருவரும் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

  கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை வேலூர் தெற்குக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai