சுடச்சுட

  

  மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய படத்தில் பிரியா வாரியர்: ட்ரைலர் காட்சிகளால் சர்ச்சை

  By DIN  |   Published on : 15th January 2019 04:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sridevi-bungalow

   

  மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் 'கண் சிமிட்டல்' புகழ் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள 'ஸ்ரீதேவி பங்களா' பாலிவுட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

  தெற்கில் இருந்து வடக்குக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு துபையில மர்மமான முறையில் விடுதி அறை ஒன்றின் குளியல் தொட்டியில் அவர் இறந்து கிடந்தது சர்ச்சையானது. 

  இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் 'கண் சிமிட்டல்' புகழ் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள 'ஸ்ரீதேவி பங்களா' பாலிவுட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
   
  ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டல் காட்சி சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலானது.

  அவர் தற்போது 'ஸ்ரீதேவி பங்களா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். இந்த படமானது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை  மலையாள திரைப்பட இயக்குனர் பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார்.படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடவில்லை.

  இந்நிலையில் 'ஸ்ரீதேவி பங்களா' திரைப்பட டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் பிரியா வாரியர்  கவர்ச்சியாகத் தோன்றுகிறார். டீசர் முடிவில்,  ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியில் கால்கள் காட்டப்படுகிறது. 

  முன்னதாக இந்தப் படமானது நடிகை ஸ்ரீதேவியின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதாக அமைந்திருப்பதாகக் கூறி, ஸ்ரீதேவியின் கணவரம், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தனது வழக்கறிஞர் மூலம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai