
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் துணை வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பமா? எனில், உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது.
1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத்.
இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் துணை வேடங்களில் நடிக்க ஆர்வமும் பயிற்சியும் உள்ள நடிகர்கள் தேவை என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்று ஆண், பெண் என இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Casting Call
— Lyca Productions (@LycaProductions) July 26, 2019
We are on the lookout for interested and trained actors for supporting roles in the film #Indian2 @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @sreekar_prasad @muthurajthangvl pic.twitter.com/8fw03eyC9d
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...