பிரபல கன்னட நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு

பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 6:30 மணியளவில் காலமானார். 
பிரபல கன்னட நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு

பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை 6:30 மணியளவில் காலமானார். அவருக்கு 81 வயது.

கன்னட திரையுலகைச் சேர்ந்த காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனி முத்திரைப் பதித்தவர்.

1974-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 1992-ஆம் ஆண்டு பத்ம பூஷன் மற்றும் 1998-ல் ஞானபீட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் எழுதிய யாயதி (1961), துக்ளக் (1964) மற்றும் ஹயவாதனா (1972) உள்ளிட்ட நாடகங்கள் பலரால் பாராட்டப்பட்டது.

1938-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி மும்பையில் பிறந்த கிரிஷ் கர்னாட், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com