முதல்முறையாக மாரடைப்பு ஏற்பட்டு கிரேஸி மோகன் மரணமடைந்துள்ளார்: இயக்குநர் எஸ்.பி. காந்தன்
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் (1952 - 2019) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66.
இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.
இந்நிலையில் கிரேஸி கிரியேஷன்ஸின் இயக்குநர் எஸ்.பி. காந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிரேஸி மோகன் அவர்களுடன் பல ஆண்டுகளாக எனக்கு நட்பு உண்டு. அவருக்குப் பெரிய அளவில் வியாதி எதுவும் இருந்தது இல்லை. முதல்முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் நாடகக் குழுவில் நல்ல உடற்தகுதியுடன் இருந்தது அவர்தான். இந்த இழப்பு எதிர்பாராதது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.