விடை பெற்றார் கிரேஸி மோகன்: திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி!

கிரேஸி மோகனின் உடல் மந்தைவெளியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இறுதிச்சடங்குகளுக்காக...
விடை பெற்றார் கிரேஸி மோகன்: திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி!

நடிகர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்களைக் கொண்ட கிரேஸி' மோகன் (66) மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி' மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரேஸி மோகனுக்கு மனைவி நளினி, மகன்கள் அஜய், அர்ஜுன் உள்ளனர். 

நாடகங்களில் இவர் படைத்த மாது, ஜானு, சீனு உள்ளிட்ட கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட 40-க்கும் அதிகமான படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். திரைத் துறையைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மந்தைவெளி அம்மணி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. 

பிறகு, கிரேஸி மோகனின் உடல் மந்தைவெளியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இறுதிச்சடங்குகளுக்காக பெசண்ட் நகர் மின் மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பெசண்ட் நகர் மயானத்தில் கமல் ஹான், நடிகை பூஜா குமார் உள்ளிட்ட திரையுலகினரும் ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு கிரேஸி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com