நானா படேகர் மீதான பாலியல் புகாரில் ஆதாரமில்லை: மும்பை காவல்துறை

நானா படேகர் மீதான பாலியல் புகாரில் ஆதாரமில்லை: மும்பை காவல்துறை

மும்பை காவல்துறையின் அறிக்கை மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தனுஸ்ரீ தத்தா தரப்பு முடிவு செய்துள்ளது...

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற திரைப்படப் பிடிப்பில் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஹிந்தி நடிகர் நானா படேகருக்கு எதிராக பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா காவல்துறையிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு இந்த விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். சட்ட ரீதியாக நானா படேகருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பலர் கேள்வியெழுப்பினர். 

இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, நானா படேகர் மீதான குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கு தொடர்பான பி அறிக்கையை மும்பை அந்தேரி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து மும்பை காவல்துறையின் அறிக்கை மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தனுஸ்ரீ தத்தா தரப்பு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com