
2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழில் அறிமுகமானாவர், சுனைனா. அதற்கு முன்பு தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வந்த சுனைனா, தமிழில் அறிமுகமான பிறகு, நடுவில் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டும் நடித்தார், மற்றபடி காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு அவர் நடித்த அத்தனையும் தமிழ்ப் படங்கள்தான்.
இந்நிலையில் இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் அவர் சொந்தக்குரலில் பேசியதில்லை. ஆனால் தற்போது தமிழ்ப் படமொன்றில் சொந்தமாகப் பேசியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் நான் நடித்த தமிழ்ப் படத்துக்கு நானே குரல் கொடுத்துள்ளேன். மஹாராஷ்டிராவிலிருந்து வந்து புதிய மொழிகளைக் கற்றுக்கொண்டு, டப்பிங்கில் முயற்சி செய்வதை நான் பெருமையாக எண்ணுகிறேன். சரியான உச்சரிப்புடன் பேசவில்லையென்றாலும் முயற்சி செய்துள்ளேன். அனைவரும் இதை விரும்புவீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.