
பிரபல பாலிவுட் கதாநாயகனான அக்ஷய் குமார், அமேஸான் பிரைமில் ஒளிபரப்பாகவுள்ள தி எண்ட் என்கிற இணையத் தொடரில் நடிக்கவுள்ளார்.
பரபரப்பான சண்டைக்காட்சிகள் கொண்ட இந்தத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என் மகன் ஆரவ் தான் நான் டிஜிடல் உலகில் இணையவேண்டும் என்று விரும்பினான். இளைஞர்கள் இதில்தான் ஆர்வமாக உள்ளார்கள். அசாத்தியமான செயல் ஒன்றைச் செய்து இளைஞர்களைக் கவர வேண்டும் என விரும்புகிறேன் என்று அக்ஷய் குமார் கூறியுள்ளார். இந்தத் தொடரை அபன்டன்சியா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றைப் பயன்படுத்தி அமேஸான் பிரைம் விடியோக்களைக் காணமுடியும்.