
சென்னை மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணையில் ஆசான் கலை கல்லூரியில் காட்சித் தொடர்பியல் வகுப்பு சார்பாக 'பதிமூன்றாவது ஆசான் த்ரிஷ்யா விருது வழங்கும் விழா' நடைபெற்றது.
விழாவில் மாணவர்கள் எடுத்த சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆசான் கலை கல்லூரியில் காட்சி தொடர்பியல் வகுப்பில் 120 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் குறும்படம் மூலமாக ஒவ்வொரு மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக சிறப்பினை ஆண்டு தோறும் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜேஷ் மற்றும் சேது மாதவன் நூற்றுக்கு மேற்பட்ட குறும்படங்கள் பார்த்து படத்தில் உள்ள அறிவியல் சமுதாயத்திற்கு தேவைப்பட்ட விபரங்களில் எடுத்து அதில் 20 படத்தை மட்டும் தேர்தெடுத்தனர்.
படத்தின் முக்கியத்துவங்கள் கொண்ட குறும்படத்தின் விலைக்கு வாங்கி அதன் மூலமாக சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தயாரிக்கப்படுவதாக கூறினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறந்த குறும்படங்களை இயக்கிய 8 இயக்குனர்களுக்கும் விருதுகள் வழங்கபட்டது.