இந்தியாவில் ஐந்தே நாள்களில் ரூ. 200 கோடி வசூலை எட்டிய அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம்!

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2845 திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம்...
இந்தியாவில் ஐந்தே நாள்களில் ரூ. 200 கோடி வசூலை எட்டிய அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம்!

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தின் அடுத்தப் பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame) படம் அதே படக்குழுவினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ளார்கள்.

இந்தப் படமும் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசனத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மார்வெல் ஏந்தம் என்கிற பாடலுக்கு இசையமைத்துள்ளார். இதுதவிர இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள். அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியும் பிளாக்விடோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்துள்ளார்கள். இந்தியாவில் 2டி, 3டி, ஐமேக்ஸ் ஆகிய வடிவங்களில் வெளியாகியுள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம்.

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2845 திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம், முதல் ஐந்து நாள்கள் வசூலில் பல சாதனைகளைப் படைத்துள்ளது

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம், முதல் நாளில் ரூ. 53.10 கோடி வசூலை எட்டியது. முதல் மூன்று நாள்களில் வசூலாக இந்தியாவில் ரூ. 187 கோடி வசூலித்தது. வரிகள் நீங்கலாக ரூ. 157 கோடி. இந்நிலையில் முதல் 5 நாள்களில் மொத்தமாக ரூ. 256.90 கோடி அதாவது வரி நீங்கலாக ரூ. 215.80 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

முதல் நாளன்று ரூ. 53.10 கோடியும் 2-ம் நாளன்று ரூ. 51.40 கோடியும் 3-ம் நாளன்று ரூ. 52.70 கோடியும் வசூலித்துள்ளது. அதன்பிறகும் அதன் வசூல் குறையவில்லை. திங்களன்று ரூ. 31.05 கோடியும் செவ்வாயன்று ரூ. 26.10 கோடியும் வசூலித்துள்ளது. 

இதன்மூலம் இந்தியாவில் மட்டும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தின் வசூல் ரூ. 400 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com