விஜய் சேதுபதிக்கு எதிராக களம் இறங்கிய வியாபாரிகள்! புதிய சர்ச்சை!

இந்த ஆண்டு இறுதிக்குள் விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
விஜய் சேதுபதிக்கு எதிராக களம் இறங்கிய வியாபாரிகள்! புதிய சர்ச்சை!
Updated on
1 min read

இந்த ஆண்டு இறுதிக்குள் விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு விளம்பரப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தைக் கண்டித்து வணிகர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

தனியார்  ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ‘மண்டி’ என்ற செயலியின் விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கஸ்டமராகவும் கடைக்காரராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பலசரக்கு சந்தையான மண்டியின் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்ததைக் கண்டித்து சில்லறை வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்களின் அறிக்கையில், 'சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளோம். நவம்பர் 04-ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலத்தை கொளத்தூர் த.ரவி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்' என்று அறிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய விஜய் சேதுபதியா இப்படி சிறு வியாரிகளுக்கு எதிராக செயல்படுவது, அது வெறும் நடிப்பா என்று நெட்டிசன்களும் கண்டித்து வருகின்றனர். உள்ளூர் வியாபாரி நிலை என்ன ஆக்கும் உங்கள் movie இனி ஆன்லைன் பார்க்கப்பட்டும் என்றும் கொதித்து எழுந்துள்ளார்கள். இதுவரை விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இதற்கான மறுப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com