சிகரெட் பிடிப்பதை முதலில் நிறுத்துங்கள்! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கொடி கட்டிப் பறக்கிறார்.
priyanka chopra
priyanka chopra

விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கொடி கட்டிப் பறக்கிறார். தற்போது 'தி ஒயிட் டைகர்' என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இது நெட்ப்ளிக்ஸில் வெளிவரும் தொடர். இதன் படப்பிடிப்பு தற்போது தில்லியில் நடந்து கொண்டிருக்கிறது.

தில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலும் (என்சிஆா்), உத்தரப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்னை நிலவி வருகிறது. தில்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூா், வாராணசி, லக்னோ உள்ளிட்ட பல நகரங்களின் காற்று நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த காற்றை சுவாசித்தபடிதான் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது, பள்ளிக் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள்.  தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். 

இந்நிலையில் தில்லி படப்பிடிப்பு பிரியங்கா சோப்ராவுக்கு அசெளகரியமாக இருக்கிறது என்று தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். ஆஸ்துமா பிரச்சனை உள்ள ப்ரியங்கா ஒரு கூலிங் கிளாஸ் அணிந்து, முகத்தில் மாஸ்க் போட்டு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அண்மையில் வெளியிட்டார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

அந்தப் பதிவில் தில்லி காற்று மாசு பற்றி ப்ரியங்கா கூறியிருப்பதாவது, 'தி ஒயிட் டைகர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இங்கே ஷூட்டிங் நடத்துவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.  இதுவே இப்படியென்றால் இங்கே வாழ்வது எவ்வளவு கஷ்டமாக இருக்கும்! என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. நாமாவது முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்ளலாம், ஏர் ப்யூரிஃபையர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வீடற்றவர்களின் நிலை? அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் பிரியங்கா.

பிரியங்காவின் இந்த பதிவைப் பார்த்த சில நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர். ஆஸ்துமா பிரச்னை உள்ள நீங்களும் பத்திரமாக இருங்கள் என்று வாழ்த்தியுள்ளனர். ஆனால் சிலர்  எரிச்சல் அடைந்து நீங்கள் சிகரெட் பிடிக்கும் போது மட்டும் சுவாசிக்க கஷ்டமாக இல்லையா, இப்போது தில்லி காற்று மாசு பற்றி பேச வந்துவிட்டீர்கள்? என்று நையாண்டியாக பதிலடி தந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com