Enable Javscript for better performance
Ajith participating in Kamal 65 program | கமல் 65 நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்பாரா? வைரலாகும் கேள்வி!- Dinamani

சுடச்சுட

  

  கமல் 65 பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ரஜினி, விஜய் வரிசையில் தல அஜித் பங்கேற்பாரா? வைரலாகும் கேள்வி!

  By Uma Shakthi  |   Published on : 06th November 2019 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thala ajith kumar

  ajith kumar

  நடிகா் கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  சினிமாவில் 60 வருடங்கள்: கடந்த 1959-ஆம் ஆண்டு 5 வயது சிறுவனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவா் கமல்ஹாசன். ‘களத்தூா் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு, திரையுலகில் இது 60-ஆவது ஆண்டு. நடிகா், இயக்குநா், தயாரிப்பாளா், வசனகா்த்தா, பாடலாசிரியா், நடன இயக்குநா் என பன்முகங்களை கொண்ட கமல், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலும் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறாா்.

  தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளாா். இந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளாா். வழக்கமாக தனது பிறந்த நாளில் நற்பணிகளை தொடங்கி வைத்து பேசும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாா்.

  மூன்று நாள்கள் விழா: வரும் 7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. இதில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகினா் பலரும் கலந்து கொள்கின்றனா். இதன் ஒரு பகுதியாக திரையுலகினா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

  தந்தைக்கு சிலை: கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பா் 7-ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு சீனிவாசனின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகிகளும் கலந்துகொள்கின்றனா்.

  பாலசந்தருக்கு சிலை: அடுத்த நாளான 8-ஆம் தேதி காலை 9.30-க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலை திறக்கப்பட உள்ளது. இதில் பாலசந்தா் குடும்பத்தினா் கலந்து கொள்கின்றனா்.

  மதியம் 3.30 மணிக்கு, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் ‘ஹேராம்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. படம் முடிந்ததும், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் கமல் கலந்து கொண்டு பதிலளிக்கிறாா்.

  இளையராஜாவின் இசை நிகழ்ச்சி: கமலின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நடக்கிறது. இந்நிகிழ்ச்சிக்கான ஒத்திகை பரபரப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசனுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்களை தனது குழுவினருடன் மேடையில் பாட திட்டமிட்டுள்ளார் இசைஞானி.

  கமலை நேரில் வாழ்த்த இந்திய சினிமா உலகப் பிரபலங்கள் முதல் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா என பலர் பங்கேற்க உள்ளார்கள். அண்மையில் சோஷியல் மீடியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் புகைப்படங்களை கொலாஜ் செய்யப்பட்டு ஃபேன் பேஸ்ட் அழைப்பிதழ் ஒன்று வைரலானது.  இதுவரை எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித், கமல் 65-ல் பங்கேற்று அவருக்கு மரியாதை செய்யக் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு அஜித் தரப்பிலிருந்து வரவில்லை என்றாலும், திரையுலகின் மூத்த நடிகரான கமல்ஹாசனைப் பாராட்டுவதற்காக தல அஜித் நேரில் வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் அஜித் ஃபோன் செய்து கமலை வாழ்த்துவார் என்றும் கூறுகிறார்கள். எது உண்மை என்பது நாளை (நவம்பர் 7) தெரிந்துவிடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai