அஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்! (விடியோ)

அல்டிமேட் ஸ்டார் அஜித்தை இன்று ரசிகர்கள் உருகும் ‘தல’ யாக ஆக்கியவர் இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ்.
thala ajith
thala ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித்தை இன்று ரசிகர்கள் உருகும் ‘தல’ யாக ஆக்கியவர் இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ். முருகதாஸின் அறிமுகத் திரைப்படமான ‘தீனா’வில் அஜித் ஹீரோ. அதற்கு முன்பிருந்தே அஜித்தை ‘தல’ என அழைக்கும் பழக்கம் கொண்டவர் இயக்குனர் முருகதாஸ். அந்தப் பழக்கத்தில் தீனா திரைப்படத்தில் அஜித்தை தல என அடைமொழியிட்டு அழைக்கும் வண்ணம் சில காட்சிகளை அமைத்தார். இந்த ஐடியா வெகு ஜோராக க்ளிக்காகி இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ‘தல’ அஜித்!

ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனதும் அப்படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் வேலைகளில் தொடங்கி அப்படத்தில் கடைசி நாள் டப்பிங் வரையிலும் தனது செல்ஃபோன் நம்பரை அஜித் மாற்றிக் கொள்வது இல்லை. ஆனால் கடைசி நாள் டப்பிங் முடிந்த மறுகணம் செல் நம்பரை மாற்றி விடுவார். காரணம் அந்தப் படத்தின் தாக்கத்திலிருந்து உளவியல் ரீதியாக விடுபடும் முயற்சியாக இந்த வழக்கத்தை அஜித் பின்பற்றுவதுண்டு என்கிறார்கள்.

அஜித் திரைப்படங்களுக்கு எந்த வித விளம்பரங்களும் தேவையில்லை. அதில் அஜித் இருக்கிறார் என்பதே படத்துக்கான மிகப்பெரிய விளம்பரம் தான். உதாரணம் மங்காத்தா, பில்லா, திரைப்படங்கள். இந்தியாவில் ரஜினிக்குப் பிறகு பேரைச் சொன்னால் அதிர வைக்கும் அப்ளாஸ்களை அள்ளும் திறன் அஜித்குமார் எனும் பெயருக்கே உண்டு எனச் சில வருடங்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது.

ஆனால் பல சமயங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்கள் திடீரென கைவிடப்படும். அவ்வகையில் நடிகர் அஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்களைக் காண்போம்.

சாருமதி (1997)  

நேருக்குநேர் (1997)

நியூ (2000)

நந்தா (2001 )

இதிகாசம் (2001)

ஏறுமுகம் (2001)

மகா (2002)

திருடா (2004)

காங்கேயன் (2006)

நான் கடவுள் (2004)

மிரட்டல் (2004)

சூப்பர் டூப்பர் ஹிட்களைக் கொடுத்த போதும் சரி, அட்டர் ஃப்ளாப்களைக் கொடுத்த போதும் சரி தனக்கு தனது திரைப்படங்கள் கொடுக்கும் சந்தோஷத்தைக் காட்டிலும் அளவிட முடியாத அளவு உற்சாகத்தை அளித்து எல்லாவித மயக்கங்களில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து மீண்டும் துடிப்பாக இயங்கக் கூடிய தன்மையைத் தரக் கூடியது பிரதிபலன் எதிர்பாராத தனது ரசிகர் கூட்டமே! என்று அஜித் கூறுவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com