"போட்றா வெடிய": பிகில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
"போட்றா வெடிய": பிகில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. 

இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. 

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பிகில் படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் டிரெய்லர் அப்டேட் குறித்த தகவலையே இன்று வெளியிட்டனர். 

பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, இதைக் கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பிகில் டிரெய்லர் ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com