
தமிழ் ட்வீட்கள் மூலம் சமூகவலைத்தளத்தில் தனக்கென்ன ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், முதல்முறையாக தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார்.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா என்கிற படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கும் தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மூன்று படங்களில் நடித்துள்ள ஹர்பஜன், முதல்முறையாக தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளார்.
சிஎஸ்கே வீரர் பிராவோ, சித்திரம் பேசுதடி 2 படத்தில் ஒரு பாடலில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ்ப் படத்தில் நடிக்கும் மற்றொரு சிஎஸ்கே வீரராக உள்ளார் ஹர்பஜன்.
பலூன் படத்தை இயக்கிய சினிஷ், கேஜேஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
#தல #தளபதி உருவாகிய பூமி. #தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னைத் தூக்கி நிறுத்திய உறவுகளே... உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் என்று ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.