
இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படம் வெளியாகவுள்ளது. இதனால் அதற்கு முன்பு வெளிவர பல தமிழ்ப் படங்கள் தயாராக உள்ளன.
பிகிலுடன் சேர்த்து தீபாவளியன்று வெளியாவதாக இருந்த விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம் அதற்கு முன்பே வெளிவரத் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளியன்று பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள சில படங்கள் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. சில படங்கள் கீழ்க்கண்ட தேதிகளில் வெளிவரத் திட்டமிட்டுள்ளன.
செப்டம்பர் 6
எனை நோக்கி பாயும் தோட்டா
மகாமுனி
ஸோம்பி
செப்டம்பர் 13
சிவப்பு மஞ்சள் பச்சை
செப்டம்பர் 20
காப்பான்
செப்டம்பர் 27
நம்ம வீட்டுப் பிள்ளை
அக்டோபர் 4
அசுரன்
சங்கத் தமிழன்
100 பர்செண்ட் காதல்
அக்டோபர் 10
ஆக்ஷன்