மும்பை: கலந்துரையாடல் நிகழ்ச்சி விடியோ ஒன்றில் கஞ்சா பயன்படுதியதாக் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப். கரோனா ஊரடங்கின் காரணமாக இவர் பங்கேற்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின் விடியோ சமீபத்தில் வெளியானது. அதில் இவர் கையில் கஞ்சா போன்ற பொருளை காகிதக் குழல் ஒன்றில் அடைப்பது மாதிரியான காட்சி இடம்பெற்றிருந்தது. இதைப்பார்த்த ஒருவர் ட்விட்டர் வழியாக மும்பை மாநகர காவலதுறையிடம், ‘அனுராக் காஷ்யப் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்’ கோரியிருந்தார்.
அதற்கு ட்விட்டர் வழியாகவே மும்பை மாநகர காவல்துறையை டேக் செய்து பதிலளித்த காஷ்யப், ‘நான் பயன்படுத்தியது வெறும் புகையிலைதான். எதற்கும் ஒருமுறை முழுமையாக இதுகுறித்து விசாரணை செய்து, பாஜக ஆதரவாளர்களுக்கும், ட்விட்டரில் கேலி செய்பவர்களுக்கும் திருப்தி ஏற்படச் செய்யுங்கள்’ என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
ஆனாலும் இந்த கரோனா தடைகாலத்தில் அவருக்கு எப்படி புகையிலை கிடைத்தது என்று, நெட்டிசன்கள் அவரைத் தொடர்ந்து விமர்சித்து, கிண்டல் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


