
சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு இரு படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் சூர்யா.
சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணி அருவா படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது. ஞானவேல்ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். சூர்யாவின் 39-ஆவது படம் இது. ஹரியின் 16-ஆவது படம். இசை - இமான்.
அசுரன் படத்துக்குப் பிறகு சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இதன்பிறகு வாடிவாசல் என்கிற சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ். இது அவர் இசையமைக்கும் 75-வது படம்.
இந்நிலையில் வாடிவாசல் பற்றி ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளதாவது:
ஜி.வி. 75 சிறப்பாக இருக்கும். இசையமைப்புப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. ஒலித்தரம் தனித்துவமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.