மும்பை: மது அருந்தினால் வயிறில் உள்ள கரோனா வைரஸ் அழியுமா என நிகழ்வொன்றில் மருத்துவரிடம் பாலிவுட் நடிகர் கேட்ட கேள்வி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 11,555 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 396 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாடுமுழுவதும் சிலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மது அருந்தினால் வயிறில் உள்ள கரோனா வைரஸ் அழியுமா என நிகழ்வொன்றில் மருத்துவரிடம் பாலிவுட் நடிகர் கேட்ட கேள்வி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் தனது சமூக வலைதள பக்கம் வழியாக கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை நடத்தி வருகிறார். இதில் நாட்டில் கரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து உரையாடி வருகிறார்.
அந்தவகையில் ஆரம்பகட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து அவர்களை மீட்ட பெண் மருத்துவர் மீமான்சா புச்-சுடன் உரையாடினார்.
பலவேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் கேள்விகளைக் கேட்ட கார்த்திக் இறுதியாக,’ மது அருந்தினால் ஒருவரது வயிறில் உள்ள கரோனா வைரஸ் அழியுமா?’ என கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த மருத்துவர், ‘அவ்வாறு கூறுவதெல்லாம் கட்டுக்கதை’ என பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


