பாரசைட் படம் பார்த்து தூங்கிவிட்டேன்: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி விமரிசனம்

ஆஸ்கர் விருதுகளை வென்ற பாரசைட் படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது...
பாரசைட் படம் பார்த்து தூங்கிவிட்டேன்: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி விமரிசனம்
Published on
Updated on
1 min read

சா்வதேசத் திரையுலகமும், திரைப்பட ரசிகா்களும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருந்த 92-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கொரிய மொழியில் எடுக்கப்பட்ட சா்வதேச அளவில் கவனம் ஈா்த்த ‘பாரசைட்’ திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது.

தென்கொரியாவில் முன்னணி இயக்குநரான போங் ஜூன் ஹோ, இந்தப் படத்தின் இயக்குநர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தை கொரிய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆசிய கண்டத்தில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இயக்குநர் என்ற சாதனையை படைத்துள்ளர் போங் ஜூன் ஹோ.

இந்நிலையில் பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, ஆஸ்கர் விருதுகளை வென்ற பாரசைட் படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது:

பாரசைட் படம் சுவாரசியமாக இல்லாததால் பாதியில் தூங்கிவிட்டேன். எனக்குப் படம் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து ராஜமெளலியின் இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்வினை செய்துள்ளார்கள். ஆஸ்கர், கேன்ஸ் விருதுகளை வென்ற ஒரு படத்தை இந்தளவுக்கு மட்டமாகக் கூறுவது சரியா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, எஸ்.எஸ். ராஜமெளலி ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார். அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது. பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ் போன்றோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் 2021 ஜனவரி 8 அன்று வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com