

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நற்பணி மன்றங்களைச் சேர்ந்தவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பி வருகிறார் நடிகர் விஜய்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 24,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். இவா்களுக்கும் சோ்த்து நிதி உள்ளிட்ட உதவிகளை திரையுலகினா் வழங்கி வருகின்றனா். விஜய்யும் தன் தரப்பிலிருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளாா்.
இதில், பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், பெப்சிக்கு ரூ.25 லட்சம், கா்நாடக முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், ஆந்திர முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், தெலங்கானா முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், புதுச்சேரி முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளாா். இதுபோக, ஒரு தொகையை தனது நற்பணி மன்றங்களுக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவும் உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளாா் விஜய்.
இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நற்பணி மன்றங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தற்போது உதவி செய்துவருகிறார் விஜய். அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு நேரடியாக ரூ. 5,000 நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார். இத்தகவலை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்கள். தன்னுடைய ரசிகர்களுக்கு வழங்குவதற்காக ரூ. 50 லட்சத்தை விஜய் ஒதுக்கியுள்ளதாக அறியப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.