சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் தாமதம் குறித்து தயாரிப்பாளர் பதில்

மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் அடுத்த படம் - இராவண கூட்டம். 
சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் தாமதம் குறித்து தயாரிப்பாளர் பதில்
Published on
Updated on
1 min read

மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் அடுத்தப் படம் - இராவண கூட்டம். 

சாந்தனு நடிப்பில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. எனினும் படம் இதுவரை வெளிவரவில்லை. இதற்கான காரணமாக தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறியதாவது:

நிலம் சார்ந்த கதை இது. மழைக் காலங்களில் மட்டுமே படத்தை எடுக்க முடியும். வருடத்தில் 3 மாதங்கள் மட்டுமே இதற்குச் சாத்தியமாகும். படத்தை அவசர அவசரமாக முடிக்க மனமில்லை. அதனால் கதையின் தன்மை பாதிக்கப்படும். தற்போதைய சூழலில் படத்தின் செலவையும் குறைக்கப்போவதில்லை. விக்ரமின் சுகுமாரின் கதையும் சாந்தனுவின் திறமையும் படத்துக்குப் பக்கபலமாக இருக்கும் என்றார்.

எனக்கு ஒரு திருப்புமுனை கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தை கண்ணன் தயாரிக்கிறார். அவருக்கும் சினிமாவுக்கும் தொடர்பில்லை. ஆனால் எங்கள் குடும்ப நண்பராக உள்ள அவர், என் மீது அக்கறை செலுத்தி வருகிறார். இந்தக் கடினமான சூழலிலும் பொறுமையாக இருந்து எங்களுக்கு ஆதரவளிக்கிறார் என்று கூறியுள்ளார் சாந்தனு.

அரசு அனுமதியளித்தவுடன் இராவண கோட்டம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com