
பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
2005-ல் மராத்தி படமான டொம்பிவலி ஃபாஸ்ட் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் அவ்வருடத்துக்கான சிறந்த மராத்தி படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. டொம்பிவலி ஃபாஸ்ட் படத்தை மாதவன் நடிப்பில் எவனோ ஒருவன் என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். மலையாள சூப்பர் ஹிட் படமான திரிஷ்யத்தை அஜய் தேவ்கன், தபுவை வைத்து 2015-ல் ஹிந்தியில் ரீமேக் செய்தார். ஃபோர்ஸ், ராக்கி ஹேண்ட்சம், மதாரி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நிஷிகாந்த். அவருடைய உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அபாயக்கட்டத்தில் உள்ள நிஷிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.