ஹிருத்திக் ரோஷனை உண்மையாகக் காதலித்தேன்: கங்கனா ஆதங்கம்

அவர் திடீரென எனக்கு எதிராக மாறிவிட்டார். இது எனக்கு இன்னும் புதிராகவே உள்ளது...
ஹிருத்திக் ரோஷனை உண்மையாகக் காதலித்தேன்: கங்கனா ஆதங்கம்

ஹிருத்திக் ரோஷனை தான் உண்மையாகக் காதலித்ததாக நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா மீது சுசாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண கிஷோா் சிங், பாட்னா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் ரியா உள்ளிட்ட 7 போ் சுசாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலை செய்யத் தூண்டியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அத்தகவல் அறிக்கையை சிபிஐக்கு மாற்ற மத்திய அரசுக்கு பிகாா் அரசு பரிந்துரைத்திருந்தது. அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கு தொடா்பான விசாரணையை பாட்னா காவல் துறையிடமிருந்து மும்பை காவல் துறைக்கு மாற்றி உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடுத்தாா். சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடா்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2018-ல் நடிகை சாரா அலி கான், சுசாந்த் சிங்குக்கு ஜோடியாக கெதர்நாத் படத்தில் அறிமுகமானார். சாரா, நடிகர் சயிப் அலி கான் - அம்ரிதா சிங்கின் மகள். நடிகை சாரா அலி கானுடனான சுசாந்த் சிங்கின் காதல் குறித்து அவருடைய நண்பர் சாமுவேல் இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளதாவது:

கெதர்நாத் பட விளம்பர நிகழ்ச்சிகளில் சுசாந்த் சிங்கும் சாரா அலி கானும் காதலில் திளைத்திருந்தார்கள். இது எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது. அவர்கள் பிரிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இருவரும் ஒருவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தார்கள். இதை இக்கால காதல்களில் பார்ப்பது அரிது. சுசாந்தின் குடும்பம், நண்பர்கள், பணியாளர்கள் என அனைவர் மீதும் சுசாந்தும் சாராவும் மரியாதை செலுத்தினார்கள். சோன்சிரியா படம் தோல்வியடைந்தபிறகு சுசாந்துடனான காதலை சாரா அலி கான் முறித்துக்கொண்டார். இதற்கு பாலிவுட் மாபியா காரணமாக இருக்குமோ எனச் சந்தேகிக்கிறேன் என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகை கங்கனா கூறியதாவது:

சாரா அலி கான் உண்மையிலேயே சுசாந்தைக் காதலித்திருப்பார். உண்மையான காதலை வெளிப்படுத்தாத பெண்ணைக் காதலிப்பதற்கு சுசாந்த் ஒன்றும் முட்டாள் கிடையாது. ஆனால் இந்தக் காதலால் சாரா அலி கான் அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பார். ஹிருத்திக் ரோஷனை நான் உண்மையாகவே காதலித்தேன். அதுபற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவர் திடீரென எனக்கு எதிராக மாறிவிட்டார். இது எனக்கு இன்னும் புதிராகவே உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com