

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா, சந்திரன், ஷ்யாம், சத்யராஜ், நிவேதா பெத்துராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சம்பத் ஜெயராம், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் - பார்ட்டி. இசை - பிரேம்ஜி.
இந்தப் படம் நீண்ட நாளாக வெளிவராமல் உள்ளது. இதனால் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பார்ட்டி படம் ஓடிடியில் வெளியாவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற வதந்திகளை நாங்கள் மறுக்கிறோம். பார்ட்டி படத்தை ஓடிடியில் வெளியிடும் திட்டம் எங்களுக்கு இல்லை. பட வெளியீடு தொடர்பாகத் தகுந்த நேரத்தில் தகவல் வெளியிடப்படும். எனவே வதந்திகளைப் பரப்பாதீர்கள். படத்தைத் திரையரங்கில் வெளியிடவே முயன்று வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.