

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன்.
மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இந்நிலையில் சூரரைப் போற்று படம் போல ஜகமே தந்திரமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
திரையரங்குகள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்பவேண்டாம். ஒட்டுமொத்தக் குழுவும் ரகிடரகிட என தனுஷ் பாடுவதைத் திரையரங்கில் காணக் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனால் ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்கில் வெளியாவதை தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.