ஓடிடியில் வெளியான படங்களில் அதிகம் பேர் பார்த்த தில் பேச்சாரா

ஓடிடி தளங்களில் வெளியான ஹிந்திப் படங்களில் தில் பேச்சாரா படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளார்கள்.
ஓடிடியில் வெளியான படங்களில் அதிகம் பேர் பார்த்த தில் பேச்சாரா
Published on
Updated on
1 min read


சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியான ஹிந்திப் படங்களில் தில் பேச்சாரா படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளார்கள்.

ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவானது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியானது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்பட்டது. யூடியூப் தளத்தில் வெளியான டிரெய்லர்களில் உலகளவில் அதிகம் பேர் விரும்பிய டிரெய்லராக தில் பேச்சாரா சாதனை படைத்தது.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் ஓடிடி தளங்களில் வெளியான ஹிந்திப் படங்களில் தில் பேச்சாரா படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளார். இத்தகவல் பார்க் - நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 20 வரை அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5, வூட், எம்எக்ஸ் பிளேயர் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியான படங்களைக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. தில் பேச்சாராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தை குடா ஹாஃபிஸ் படம் அடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com