

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. 2006-ல் கேடி படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த ஆக்ஷன் படம் சமீபத்தில் வெளியானது.
கடந்த ஆகஸ்டு மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என தமன்னா தெரிவித்திருந்தார். இதையடுத்து படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற தமன்னாவிற்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கரோனாவிலிருந்து குணமாகியுள்ள தமன்னா, மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். சீட்டிமார் என்கிற தெலுங்குப் படத்தில் கோபிசந்துடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில், படக்குழுவினர் முன்னிலையில் கேட் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் தமன்னா. இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.