‘அண்ணாத்த’ படக்குழுவில் 4 பேருக்கு கரோனா: நடிகா் ரஜினிகாந்துக்கு நோய் பாதிப்பில்லை

அண்ணாத்த படக்குழுவில் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், நடிகா் ரஜினிகாந்துக்கு நோய் பாதிப்பில்லை என சன் பிக்சா்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘அண்ணாத்த’ படக்குழுவில் 4 பேருக்கு கரோனா: நடிகா் ரஜினிகாந்துக்கு நோய் பாதிப்பில்லை
Updated on
1 min read


சென்னை: அண்ணாத்த படக்குழுவில் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், நடிகா் ரஜினிகாந்துக்கு நோய் பாதிப்பில்லை என சன் பிக்சா்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சா்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டது. சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு, டிசம்பா் 14-ஆம் தேதி ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அரசின் அறிவுறுத்தலின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் நடன இயக்குநா் பிருந்தா நடன அமைப்பில் பாடலொன்றை படமாக்கி வந்தது படக்குழு.

மேலும், வழக்கமாகச் செய்யப்படும் கரோனா பரிசோதனையின் போது 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ‘அண்ணாத்த’ படக்குழுவினா், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஒத்திவைத்து விட்டு உடனடியாக சென்னை திரும்புவதாகவும், நடிகா் ரஜினிகாந்த் இன்னும் ஓரிரு நாள்களில் சென்னை திரும்புகிறாா் எனவும் அத்திரைப்பட வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சன் பிக்சா்ஸ் நிறுவனம் தனது சுட்டுரைப் பதிவில், ‘படக்குழுவில் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுகிறது. ‘நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவைச் சோ்ந்த மற்ற நபா்களுக்கு கரோனா நோய் பாதிப்பில்லை’ என தெரிவித்துள்ளது.

மேலும், கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்று வந்த போதிலும் எப்படி கரோனா தொற்று பரவியது. படக்குழுவினா் யாரேனும் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் படப்பிடிப்புக்குள் வந்தாா்களா என்று படக்குழுவினா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com