செய்திகள்
சிம்புவின் ஈஸ்வரன்: ஜனவரி 2-ல் பாடல்கள் வெளியாகிறது
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் ஜனவரி 2 அன்று வெளியாகவுள்ளன.
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் ஜனவரி 2 அன்று வெளியாகவுள்ளன.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு.
இந்நிலையில் தமன் இசையமைத்துள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் ஜனவரி 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

