திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர்: நடிகர் தனுஷ் மகிழ்ச்சி

திரையரங்க அனுபவத்துக்கு வேறெதுவும் ஈடாகாது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி...
திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர்: நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
Updated on
1 min read

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு நடிகர் தனுஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

மாஸ்டர் படம், ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு நடிகர் தனுஷ் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

விஜய்யின் மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று வெளியாகிறது. திரைப்படக் காதலர்களுக்கு இது நல்ல செய்தி. படத்தை நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து பார்ப்பது திரையரங்கில் படம் பார்க்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும் என நம்புகிறேன். திரையரங்க அனுபவத்துக்கு வேறெதுவும் ஈடாகாது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி படத்தைத் திரையரங்கில் பாருங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com