விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

காதலர் தினத்தன்று தான் இயக்கவுள்ள அடுத்தப் படத்தின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 
Published on

காதலர் தினத்தன்று தான் இயக்கவுள்ள அடுத்தப் படத்தின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக, காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். தயாரிப்பு - லலித் குமார். 

பிரபல நடிகர், நடிகைகள் நடிப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com