

2009-ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவும் சினேகாவும் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் உண்டானது. 2011-ல் காதலை வெளியுலகுக்கு அறிவித்தார் பிரசன்னா. 2012-ல் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2015-ல் ஆண் குழந்தை பிறந்தது. விஹான் எனப் பெயர் சூட்டினார்கள்.
கடந்த மாதம் சினேகாவுக்கு 2-வதாகப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆத்யந்தா (Aadhyantha) எனப் பெயர் சூட்டியுள்ளதாக நடிகர் பிரசன்னா தகவல் தெரிவித்துள்ளார். மகளுக்குப் பதிலாக மீண்டும் மகன் பிறந்திருந்தால் ஆத்யா (Aadya) எனப் பெயர் சூட்டவிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.