

பிரபல புகைப்படக் கலைஞர் டப்பூ ரத்னானி, இந்த வருடத்துக்கான நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அடங்கிய காலண்டரை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற காலண்டர் வெளியீட்டு விழாவில் ரேகா, ஜாக்கி ஷெராப், வித்யா பாலன், இஷா கோபிகர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
சன்னி லியோன், கியாரா அத்வானி, பூமி பட்நேகர் ஆகிய பிரபல பாலிவுட் நடிகைகள் மேலாடை இன்றி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்கள். காலண்டரில் இடம்பெற்றுள்ள சில படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வருட காலண்டரில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாருக் கான், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஜான் ஆபிரஹாம், ஆலியா பட், அனுஷ்கா சர்மா, வித்யா பாலன், க்ரீத்தி சனோன், விக்கி கெளஷல் போன்றோரும் இந்த வருட காலண்டரில் இடம்பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.