2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 

2019-ஆம்  ஆண்டு தமிழ்த் திரையுலகில்  அதிகப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். 
2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 
Published on
Updated on
1 min read

2019-ஆம்  ஆண்டு தமிழ்த் திரையுலகில்  அதிகப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். 

ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும், அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். சென்ற ஆண்டில், தான் இசையமைத்த எல்லாப் படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். 

கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதற்றத்தை இசை வழியே மிக அற்புதமாக கடத்தியிருப்பார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் காதலர்களை ஏங்கவிடும் அளவிற்கு கச்சிதமான இசையை வழங்கியிருந்தார். மேலும் அவர் இசை அமைத்ததில் கே 13, 100, அயோக்யா ஆகிய திரில்லர் படங்களுக்கும் , தேவி 2 , ஜடா போன்ற ஹாரர் படங்களுக்கும் அதன் கதையோட்டம் கொஞ்சமும் குறையாமல் தன் இசையால் ரசிகர்களை கவனிக்க வைத்தார் சாம்.சி.எஸ். அப்படங்களின் சுவாரசியத்தை தன்  இசையால் மிக அழகாக கடத்தியிருந்தார். பின்னணி இசை  போலவே அவரின் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலும் மிகச் சிறந்த இசையை வழங்கி 2019-ஆம் ஆண்டை  அருமையாக கடந்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டிலும் அவரது வலிமையான இசைப்பயணம் இன்னும் அதிக மிடுக்குடன் வீரநடை போட காத்துக் கொண்டிருகிறது

2019-இல் அவர்  கைதி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், ஜடா, அயோக்யா, கொரில்லா, கே13, 100 , தேவி 2 ஆகிய எட்டு படங்களுக்கு இசை அமைத்து இந்த ஆண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற பெருமையை தன் வசம் தக்க வைத்து கொண்டார். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர் என்று சமூக வலைத்தளங்களில் அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com