டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

சென்னையிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டுள்ளார். 
டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!
Updated on
1 min read

வம்சம் தொடரில் வில்லியாக நடித்துப் புகழடைந்தவர் நடிகை ஜெயஸ்ரீ. நடிகர் ஈஸ்வரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். தன்னிடமுள்ள பணம், நகைகளை அபகரித்துக்கொண்டார். இதனால் குழந்தையுடன் தவித்து வருவதாக கணவர் ஈஸ்வர் மீது சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார் நடிகை ஜெயஸ்ரீ. 

மூன்று ஆண்டுகளுக்குத் தன்னைத் திருமணம் செய்த ஈஸ்வர், தன்னைக் கொடுமைப்படுத்தி வந்தார். வேறொரு நடிகையுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததை நான் கண்டுபிடித்ததால் சித்ரவதை அதிகமானது என்று தன் கணவர் மீது குற்றம் சுமத்தினார் ஜெயஸ்ரீ. இதையடுத்துக் கைது செய்யப்பட்ட ஈஸ்வர், தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிறகு, சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ. 

இந்நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை ஜெயஸ்ரீ. அவர் தூக்க மாத்திரங்களை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது சென்னையிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com