

மைசூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. அந்த விமானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட 42 பயணிகள் பயணித்தனர்.
அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததால், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.
உடனடியாக அங்கு சென்ற பொறியாளர்கள் அக்கோளாறை சரி செய்தனர். பயணிகளுடன் நடிகர் ரஜினிகாந்தும் காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பயணிகள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
எதிர்பாராத இந்தத் தாமதத்துக்குப் பிறகு, விமானம் இயக்கப்பட்டு சென்னைக்குச் வந்தது.
தற்போது, இயக்குநர் சிவாவின் பெயரிடப்பட்டத படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.