
ஆஸ்கர் அமைப்பில் இந்த வருடம் புதிதாக 819 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஆஸ்கர் அமைப்பில் 9000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் பாலிவுட் கலைஞர்கள் ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட் மற்றும் ஆவணப்படக் கலைஞர்கள் ஷெர்லி ஆபிரஹாம், அமித் மதேஷியா உள்ளிட்ட 819 பேரை இந்த வருடம் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளது ஆஸ்கர் அமைப்பு. தமிழகத்தின் கியூப் நிறுவனத்தைச் சேர்ந்த வி. செந்தில் குமாரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு விண்ணபிக்கும் படங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆஸ்கர் அமைப்பு. அதன்படி அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இந்த வருடம் வெளியான படங்களுக்கு மட்டும் இது பொருந்தும். இந்த மாற்றம் தற்காலிகமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.