பிரபல தமிழ்த் தயாரிப்பாளர் ஆரம்பிக்கும் புதிய ஓடிடி தளம்!

மிகக்குறைந்த விலையில் வாரம்தோறும் புதிய படங்களை ரசிகர்களிடம் சேர்க்கவுள்ளதாக ரீகல் டாக்கீஸ் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
பிரபல தமிழ்த் தயாரிப்பாளர் ஆரம்பிக்கும் புதிய ஓடிடி தளம்!
Published on
Updated on
1 min read

'அட்டக்கத்தி’, ‘பிட்சா’, 'சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘இன்று நேற்று நாளை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘அதே கண்கள்’ போன்ற படங்களைத் தயாரித்து ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர் சி.வி. குமார்.

இப்போது இவருக்குப் புதிய அடையாளம் கிடைத்துள்ளது - ஓடிடி தள உரிமையாளர். 

திருக்குமரன் எண்டெர்டெயிண்மெண்ட் பட நிறுவனத்தின் அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற சர்வதேச ஓடிடி தளத்தை வரும் 8-ம் தேதி தொடங்குகிறார்.

மிகக்குறைந்த விலையில் வாரம்தோறும் புதிய படங்களை ரசிகர்களிடம் சேர்க்கவுள்ளதாக ரீகல் டாக்கீஸ் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ் போல மாதத்துக்கு, வருடத்துக்கு இவ்வளவு தொகை என்றில்லாமல் ஒரு படத்தைப் பார்க்க இவ்வளவு ரூபாய் கட்டணம் என்கிற பே பெர் வியூ என்கிற வகையில் இந்தத் தளம் செயல்படவுள்ளது.

சி.வி.குமாரின் இந்த முயற்சிக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com